சென்னையில் நடந்து வரும் பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசி வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அடுத்த ஏழு மாதங்களுக்கு திமுக அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிர படுத்த வேண்டும். அடுத்த ஏழு மாதங்களுக்கு யாருக்கும் ஓய்வு கிடையாது, தீவிரமாக உழைக்க வேண்டும் என நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுரை. பெண்களை அதிக அளவில் பூத்து கமிட்டிகளில் சேர்க்க வேண்டும் எனவும் நிர்வாகிகளுக்கு அண்ணாமலை அறிவுறுத்தல் வழங்கி உள்ளார். மத்திய அரசின் திட்டங்களால் பயனடைந்த மக்களை அழைத்துப் பேச வேண்டும் என்றும் அண்ணாமலை அறிவுறுத்தல் வழங்கி உள்ளார்.