இந்தியாவில் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் பாலியல் உறவு வயது வரம்பு 18 ஆக உயர்த்தப்பட்டது. இதுகுறித்து எந்த விவாதமும், எந்த ஒரு பரிந்துரைகளும் இல்லாமல், எந்த ஒரு குறிப்பிட்ட புள்ளி விவரங்களோ இல்லாமல் உயர்த்தப்பட்டதாகவும் கடந்த 70 ஆண்டுகளாக பரஸ்பர சம்மதத்துடன் கூடிய பாலியல் உறவு 16 ஆக இருந்ததை கடந்த 2013 ஆம் ஆண்டில் குற்றவியல் திருத்த சட்டத்தின்படி உயர்த்தி உள்ளனர்.
அதனால் தற்போதுள்ள இளம் வயதினர்களுக்கிடையே ஆன பாலியல் உறவை பாலில் குற்றமாக தற்போதைய சட்டம் வகைப்படுத்துவதாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையில் மூத்த பெண் வக்கீல் இந்திரா ஜெய்சிங் எழுத்துப்பூர்வமாக தனது கருத்துக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
அதில் இன்றைய கால இளம் வயதினர் முன்கூட்டியே பருவம் எய்தி விடுகிறார்கள். அவர்கள் விருப்பம் போல் பாலியல் உறவு தீர்மானிக்கும் திறனையும் முன்கூட்டியே பெற்று விடுகின்றனர். ஆனால் அவர்களின் சுதந்திரம், முதிர்ச்சி, திறனாய்வுற்றை கண்டு கொள்ளாமல் பரஸ்பர பாலியல் உறவை பாலியல் குற்றமாக கருதப்படுகிறது.
சமீப காலங்களில் வெளியான புள்ளி விவரங்களின்படி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு முதல் 16 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் வயதினருக்கான போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை 180% அதிகரித்துள்ளது எனவும் பெரும்பாலான புகார்கள் சாதி, மதம் ரீதியிலான புகார்களாக சிறுமிகளின் பெற்றோர்களால் அளிக்கப்படுகிறது.
இது மாதிரியான சட்டங்கள் அரசியல் சாசனம், குழந்தைகளின் நலன்களுக்கும் எதிரானது என எழுத்துப்பூர்வமான கருத்துக்களை தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு எதிராக மத்திய அரசு, பரஸ்பர பாலியல் உறவுக்கான வயது 18 விட குறைவாக இருப்பது சாத்தியமில்லை.
இது குழந்தைகளின் பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்பட்ட சட்டம் எனவும், இந்திய அரசியலமைப்பின் கீழ் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் உள்ளார்ந்த பாதுகாப்பு எனவும் மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
