கனடாவின் சர்ரேயில் நகைச்சுவை நடிகர் கபில் சர்மா, கேப்ஸ் கபே ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை அன்று அவரது கடையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதற்கு காரணம் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த கோல்டி தில்லான் என்பவர் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ஒரு பதிவு தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த பதிவில் ஜெய் ஸ்ரீ ராம் சர்ரேயில் நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு நாங்கள் பொறுப்பேற்கிறோம். நாங்கள் அவரை பலமுறை அழைத்தோம், ஆனால் அவர் அழைப்பை ஏற்கவில்லை.

 

இதனால் இந்த நடவடிக்கையை எடுக்க வேண்டியதாயிற்று. அவர் இன்னும் அழைப்பை ஏற்கவில்லை என்றால் அடுத்து மும்பையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பதிவின் நம்பகத் தன்மையை காவல்துறையினர் சரி பார்த்து வருகின்றனர். துப்பாக்கி சூடு நடந்ததாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். ஆனால் சம்பவம் தொடர்பான அதிகாரப்பூர்வ விவரங்களை இன்னும் வெளியிடவில்லை. துப்பாக்கி சூடு நடந்ததாக கூறப்படும் வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.