கேரள மாநிலத்தில் உள்ள தோட்டத்தில் கட்டபட்டுள்ள யானையுடன் இளம்பெண்கள் நடனமாடிய வீடியோ தற்போது சமூகத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவில், இளம் பெண் இருவர் ஒரு தோட்டத்தில் பரதநாட்டியம் ஆடுவது போல் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். பின்னால் இருக்கும் சங்கிலியால் கட்டப்பட்ட யானை அவர்களது நடனத்தின் இசைக்கேற்ப தலையை ஆட்டி நடனமாடியது.

இந்த வீடியோவுக்கு பலரும் கலவையான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சில வன அதிகாரிகள் மற்றும் பார்வையாளர்கள் யானை மன அழுத்தத்தில் இருப்பதாகவும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்த வீடியோ பல லட்சக்கணக்கான பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது.