செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, நாங்குநேரி சம்பவம் போல  பல சம்பவங்களை மறைக்கிறீங்க. நீங்க ரெண்டு லட்சம் ரூபாய் கொடுத்தது  இந்த கேஸை மூடி மறைப்பதற்காகவா ? நாங்குநேரி பள்ளி மாணவனை, இந்த பள்ளியில் இருந்து மாற்றிலால் பிரச்சனை தீர்ந்துவிடுமா ? அப்படியென்றால் ? அந்த பள்ளிக்கு வேறு எந்த குழந்தையாவது போனால் ? இங்கே நமக்கு சாதி ரீதியாக துன்புறுத்தல் இருக்கும். நம்மளால படிக்க முடியாது என்று அந்த பள்ளிக்கு போக மட்டாட்களே…

தூத்துக்குடி மாவட்டம், திருநெல்வேலி மாவட்டம், தென்காசி மாவட்டம் விருதுநகர் என  பல மாவட்டங்களில்… பல இடங்களில்,  பள்ளிகளே  சாதி ரீதியாக செயற்கையாக பிரிக்கப்படுகிறது. அதையெல்லாம் நான் சொல்ல நிறைய இருக்குது. இதெல்லாம் தெரியும். எஜுகேஷன் டிபார்ட்மெண்டுக்கு தெரியும், அரசுக்கு தெரியும்.

ஒரே  ஊருக்குள்ள அந்த பள்ளிக்குள்ள படிக்க முடியாம போறாங்க. இதெல்லாம் பள்ளி மாணவர்களால் மட்டுமே ஏற்படுகிறது என்று நினைக்கக் கூடாது. இதுக்கு அரசியல்வாதிகளும் ஒரு காரணம். அந்த பள்ளிகளில் தேவையில்லாமல் சாதி தலைவர்களுடைய பிறந்த நாளை கொண்டாடுவதற்கு எதற்கு அனுமதிக்கிறாங்க ? பிறந்தநாளுக்கு எதுக்கு அனுமதிக்கிறாங்க ? எல்லா போட்டோவும் எதுக்கு அனுமதிக்கிறாங்க ? இதெல்லாம் எதுக்கு அனுமதிக்கிறீங்க ?

வெறும் போலியாக  நீங்க சமூக நீதி பேசினா போதுமா ? ஜாதி ஒழிப்பு பற்றி பேசினால் போதுமா ? அதுக்கான ஒரு ஸ்டேப்  நடவடிக்கை எடுக்க வேண்டாமா ? ஜாதியை ஒழிப்பதற்கு, ஜாதிய வேறுபாடுகளை கலைவதற்கு…  சாதி ரீதியான கொலைகள், ஜாதி ரீதியான தாக்குதலை தடுப்பதற்கு, நடவடிக்கை ஏதும் எடுக்காமல்..  வெறுமனே நீலி கண்ணீர்  வடித்து என்ன பயன் ? அதுதான் நான் இங்க இருக்கக்கூடிய முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு வைக்கக்கூடிய வேண்டுகோள்  என தெரிவித்தார்.