சமூக வலைத்தளங்களில் அபாயகரமான ஸ்டண்ட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. சில இளைஞர்கள் ஓடிக்கொண்டிருக்கும் ‘தார்’ (Thar) காரின் கூரையின் மீது ஏறி நின்று சாகசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பிரேக் போட்டதால் கீழே விழுந்துள்ளனர். வேகமாக வந்து கொண்டிருந்த லாரிக்கு மிக அருகில் இந்தச் சம்பவம் நடந்தது, ஆனால் அதிர்ஷ்டவசமாக இளைஞர்கள் உயிர் தப்பினர்.
வீடியோவில், வெள்ளை நிற ‘தார்’ கார் சாலையில் செல்லும்போது அதன் கூரையின் மீது நான்கு அல்லது ஐந்து இளைஞர்கள் நின்று சாகசம் செய்கின்றனர்.
🚨Thar wale Chapri: Truck driver immediately applied brakes, Otherwise, the entire fault would have been the truck driver’s, Who knows what people would have done to that driver, accident could have been bigger, People risk lives just to make a reel.pic.twitter.com/sWYHZ7VeBA
— Deadly Kalesh (@Deadlykalesh) November 20, 2025
அப்போது, முன்னால் வந்த ஒரு லாரிக்கு மிக அருகில் கார் செல்லும்போது, சமநிலை தவறியதால் இளைஞர்கள் சடாரெனச் சாலையில் விழுந்தனர்.
நல்ல வேளையாக, லாரி ஓட்டுநர் உடனடியாக பிரேக் போட்டதால், விழுந்த இளைஞர்கள் லாரியின் சக்கரங்களில் சிக்காமல் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இதுபோல உயிரைப் பணயம் வைத்துச் சாகசம் செய்வதைக் கண்டித்த நெட்டிசன்கள், லாரி ஓட்டுநரின் விரைவான செயல்பாட்டைப் பாராட்டினர். மேலும், இந்த இளைஞர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
