சோஷியல் மீடியாவில் ‘கூல்’ ஆகத் தெரிவதற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைப்பவர்களுக்கு இந்த வீடியோ ஒரு சரியான பாடம். கேரளாவைச் சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் முபாரக், நாகாலாந்துக்குச் சுற்றுலா சென்ற இடத்தில் செய்த ஒரு காரியம் இப்போது இணையத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் மிக காரமான மிளகாயாகக் கருதப்படும் ‘பூத் ஜோலோக்கியா’வை (Bhut Jolokia) பார்த்த முபாரக், “இதெல்லாம் நமக்கு எம்மாத்திரம்” என்பது போலத் தில்லாக கேமராவை ஆன் செய்யச் சொல்லி, அந்த மிளகாயை அப்படியே கடித்துச் சாப்பிட்டார்.
View this post on Instagram
முதலில் ஸ்டைலாகச் சிரித்தவருக்கு, அடுத்த சில நொடிகளில் காரம் வேலையைக் காட்டத் தொடங்கியது. கண்கள் சிவந்து, கண்ணீர் தாரை தாரையாகக் கொட்ட, தொண்டையிலும் காதிலும் தீப்பிடித்தது போன்ற உணர்வால் அலறினார்.
காரம் தாங்க முடியாமல் அருகில் இருந்த கடைகளுக்கு ஓடிச் சென்று சாக்லேட், ஐஸ்கிரீம், கூல்ட்ரிங்க்ஸ் எனத் கண்ணில் பட்டதை எல்லாம் வாரிச் சுருட்டித் தின்று ஒரு வழியாக உயிரைத் தற்காத்துக் கொண்டார்.
“தப்பித் தவறி கூட யாரும் இந்த வேலைய செஞ்சிராதீங்கப்பா” என அவர் கடைசியில் அழுதபடியே சொன்ன வீடியோ இப்போது 1 கோடிக்கும் மேலான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது.
