அகமதாபாத்தில் மழை நின்றுவிட்டது,  இந்திய நேரப்படி இரவு 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் தெரிவித்துள்ளது..

2023 ஐபிஎல் இறுதிப் போட்டியில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் நேற்று அகமதாபாத் மைதானத்தில் மோத இருந்தது.. ஆனால் மழைக் காரணமாக போட்டி ரத்து செய்யப்பட்டு இன்று இரவு 7:30 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்நிலையில்  சென்னை அணி கேப்டன் தோனி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணியின் துவக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர்..  துஷார் தேஷ்பாண்டே வீசிய 2வது ஓவரின் 4வது பந்தில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தீபக் சாஹர் கோட்டை விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்டு கில் மற்றும் சாஹா அதிரடி தொடக்கத்தை கொடுத்தனர். பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி குஜராத் அணி 62 ரன்கள் சேர்த்தது..

அதன்பின் ஜடஜாவின் 7வது ஓவரின் கில் தோனியால் ஸ்டெம்பிங் செய்யப்பட்டார். கில் 39 ரன்களில் வெளியேறினார் இதையடுத்து சாய் சுதர்சன் – சாஹா ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடியது. பின் சிறப்பாக விளையாடிய சாஹா 39 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.  இதையடுத்து ஹர்திக் பாண்டியா மற்றும் சாய் சுதர்சன் கைகோர்த்தனர். இதில் சுதர்சன் அரைசதம் கடந்தார். பின் சுதர்சன் அதிரடியாக சிக்ஸர், பவுண்டரி என விளாச ஸ்கோர் உயர்ந்தது.. இறுதியில் பத்திரனாவின் கடைசி ஓவரில்  முதல் 2 பந்தை சிக்சருக்கு தூக்கினார்..

தொடர்ந்து 3வது பதில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். சிறப்பாக விளையாடிய சுதர்சன் 47 பந்துகளில் 8 பவுண்டரி,  6 சிக்சர் உட்பட 96 ரன்கள் எடுத்தார். பின் ரஷீத் கான் கடைசி பந்தில் தூக்கி அடிக்க முயன்று டக் அவுட் ஆனார்..  ஹர்திக் பாண்டியா 21 ரன்களுடன் அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். முடிவில் குஜராத் அணி 20 ஓவர் முடிவில் 214 ரன்கள் குவித்தது.. அதன்பின் மழைக்கான அறிகுறிகள் தென்பட்டது.

பின் போட்டி தொடங்கியது. சென்னை அணியின் துவக்க வீரர்களாகடேவான் கான்வே மற்றும் ருதுராஜ் கெய்க்வாட்  இருவரும் களமிறங்கினர்.  முகமது ஷமியின் முதல் ஓவரின் 3வது பதில் பவுண்டரி அடித்தார் ருதுராஜ். அப்போது மழை மீண்டும் வேகமாக பெய்ய ஆரம்பித்தது.. இதனால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. மைதானத்தில் தார்பாய் மூடப்பட்டது. தற்போது மழை நின்றுள்ளது. எனவே போட்டி ஓவர்கள் குறைக்கப்பட்டு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை போட்டி நடத்தப்படாமல் போனால் லீக் போட்டிகளில் அதிக வெற்றியின் அடிப்படையில் குஜராத் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். தற்போது 10:45 மணிக்கு பிட்ச் ஆய்வு நடைபெறும் என ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது.