ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் சுப்மன் கில்..

மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது குவாலிபையர் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் பெய்த மழை காரணமாக போட்டி தாமதமாக இரவு 8 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் துவக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் கில் இருவரும் களமிறங்கினர். இதில் சாஹா 18 ரன்னில் அவுட் ஆன போதிலும் கில் சிறப்பாக ஆடி வருகிறார். கில் 8 ரன்களை கடந்து ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

இதுநாள் வரை ஆரஞ்சு தொப்பியை பெங்களூர் அணியின் கேப்டன் பாப் டு பிளஸ்சிஸ்  வைத்திருந்தார். அவர் இந்த லீக் போட்டிகளில் 730 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். ஆனால் தற்போது  8 ரன்களை கடந்து  முதலிடத்தை பிடித்துள்ளார் கில். பாப் டு பிளஸ்சிஸ் 14 போட்டிகளில் செய்த சாதனையை 16 போட்டிகளில் செய்துள்ளார் கில்.. தற்போது மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கில் 49 பந்துகளில் சதமடித்து விலாசி வருகிறார்.

தற்போது கில் 52 பந்துகளில் (10 சிக்ஸர், 5 பவுண்டரி) 117 ரன்களுடனும், சுதர்சன்27  ரன்களுடனும் ஆடி வருகின்றனர். குஜராத் அணி 15 ஓவர் முடிவில் 165 ரன்களுடன் உள்ளது.