2023 ஐபிஎல் தொடரில் 3வது முறையாக சதமடித்தார் குஜராத் டைட்டன்ஸ் வீரர் கில் 

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆஃப் சுற்றில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற குவாலிபையர் 1 ஆட்டத்தில் சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதின, இதில் சென்னை வெற்றி பெற்று நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. மறுநாள் எலிமினேட்டர் ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தி மும்பை அணி குவாலிபையர் 2ல் விளையாட தகுதி பெற்றது.

இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான 2வது குவாலிபையர் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று நடைபெற்றது. அகமதாபாத்தில் மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே 7:45 மணிக்கு டாஸ் போடப்பட்டு போட்டி இரவு 8 மணிக்கு நடைபெற்றது..

இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி குஜராத் அணியின் துவக்க வீரர்களாக விருத்திமான் சாஹா மற்றும் கில் இருவரும் களமிறங்கினர். இதில் சாஹா 18 ரன்னில் அவுட் ஆனார். பின் சாய் சுதர்சன் மற்றும் கில் ஜோடி சேர்ந்தனர். சாஹா போதிலும் கில் சிறப்பாக ஆடி அரைசதமடித்தார். அதுமட்டுமின்றி கில் 8 ரன்களை கடந்து தொடக்கத்திலேயே ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றினார்.

தொடர்ந்து சிறப்பாக ஆடிய கில் சிக்ஸர் மழைகளை பொழிந்து 49 பந்துகளில் சதமடித்தார்.. தற்போது கில் 52 பந்துகளில் (10 சிக்ஸர், 5 பவுண்டரி) 117 ரன்களுடனும், சுதர்சன்27  ரன்களுடனும் ஆடி வருகின்றனர். குஜராத் அணி 15 ஓவர் முடிவில் 165 ரன்களுடன் உள்ளது. இந்த சீசனின் 3வது ஐபிஎல் சதமடித்துள்ளார் கில். இதில் கடைசி 4 போட்டிகளில் கில்லுக்கு இது 3வது சதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது..