குவாலிபயர் 2ல் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது..

2023 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இதையடுத்து எலிமினேட்டர் சுற்றில் லக்னோவை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி குவாலிபயர் 2க்கு தகுதி பெற்றது. இந்நிலையில் இன்று குவாலிபயர் 2ல் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று 7:30 மணிக்கு மோதுவதாக இருந்தது.

ஆனால் போட்டி நடைபெறும் அகமதாபாத் மைதானத்தில் மழை பெய்த காரணத்தால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. எனவே இரவு 7: 45 மணிக்கு டாஸ் போடப்படும் எனவும், போட்டி இரவு 8 மணிக்கு தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது..

இன்று வெற்றி பெறும் அணி வரும் 28ஆம் தேதி இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொள்ளும். இறுதிப் போட்டிக்குள் செல்ல இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது..

குஜராத் டைட்டன்ஸ் லெவன்:

சுபமன் கில், விருத்திமான் சாஹா (வி.கே), சாய் சுதர்சன், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேட்ச்), டேவிட் மில்லர்,
ராகுல் டெவாடியா, ரஷீத் கான், நூர் அகமது, முகமது ஷமி, மோஹித் ஷர்மா.

மும்பை இந்தியன்ஸ் லெவன் :

ரோஹித் ஷர்மா (கேட்ச்), இஷான் கிஷன் (விக்கி), கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட்,  ஜோர்டான், குமார் கார்த்திகேய சிங், ஆகாஷ் மத்வால், பியூஸ் சாவ்லா, ஜே பெஹ்ரன்டோர்ஃப்.