தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான தனுஷ் இப்போது ரஜினி மகளை விவாகரத்து செய்துவிட்ட நிலையில், முழுநேரமாக சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். பல ஆண்டுகளுக்கு பின் wunderbar நிறுவனம் வாயிலாக மீண்டும் அவர் படம் தயாரிக்க போகிறார். மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் அப்படம் குறித்த அறிவிப்பு அண்மையில் வெளியானது.

தற்போது தனுஷ் நடித்துவரும் கேப்டன் மில்லர் திரைப்படத்திற்காக நீண்ட தாடி வைத்திருக்கிறார். இந்நிலையில் நேற்று நடைபெற்ற சென்னை vs பெங்களூரு IPL போட்டியை நேரில் காண தனுஷ் ஸ்டேடியதுக்கு வந்துள்ளார். அப்போது தனுஷ் அருகில் கன்னட சூப்பர்ஸ்டார் சிவராஜ்குமார் அமர்ந்து இருக்கிறார். அந்த புகைப்படம் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.