IPL 2023 மார்ச் 31 ஆம் தேதி துவங்குகிறது. கடந்த சீசன் வரை மொபைலில் போட்டிகளை பார்க்க டிஸ்னி+ஹாட்ஸ்டார் சப்ஸ்க்ரிப்ஷன் பெறவேண்டி இருந்தது. இந்நிலையில் ரிலையன்ஸ் ஜியோ தன் Jio Cinema செயலி வாயிலாக IPL கிரிக்கெட் போட்டிகளானது நேரடியாக ஒளிபரப்பப்படும் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது. இது தவிர்த்து இங்கே நீங்கள் 4K தெளிவுத் திறனுடன் போட்டியை கண்டுகளிக்க முடியும் என்பது குறிப்பிடடத்தக்கது. அதன்படி ரிலையன்ஸ் ஜியோ, உயர் தெளிவுத்திறனுடைய போட்டிகளை தற்போது பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கும்.
Jio Cinema செயலியில் 12 மொழிகளில் IPL போட்டிகளை கண்டுகளிக்கும் வசதி இருக்கும். இப்போட்டியை ஆங்கிலம், தமிழ், இந்தி, தெலுங்கு, மராத்தி, குஜராத்தி, பெங்காலி, போஜ்புரி ஆகிய மொழிகளில் பார்க்கலாம். நீங்கள் போட்டியின் மொழியை மாற்றம் செய்தால், ஆப்ஸ் வர்ணனையை மட்டும் மாற்றாது. புள்ளி விபரங்கள் மற்றும் கிராபிக்ஸ் போன்றவற்றிலும் மாற்றம் தெரியும்.