சென்னை பனையூரில் ஏ.ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் ஆணையர் நேரில் விசாரணை நடத்துகிறார்.

நிகழ்ச்சி ஏற்பாடு செய்த குழுவிடம் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் விசாரணை நடத்துகிறார் பனையூரில் ஏ ஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி நடந்த இடத்தில் தாம்பரம் காவல் நிலையம் அமல்ராஜ் ஆய்வு செய்து வருகிறார்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பனையூரில் நேற்றைய தினம் ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ”மறக்குமா நெஞ்சம்” என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழ்ச்சி இரவு 11 மணி வரை நடைபெற்றது. கிட்டத்தட்ட 20,000 மேற்பட்ட இருக்கைகள் போடப்பட்டு இதற்காக சில்வர் – பிளாட்டினம் – டைமண்ட் – கோல்ட் என  பல்வேறு பிரிவுகளில் டிக்கெட் விற்பனை ஆன்லைன் வாயிலாக செய்யப்பட்டது.

பல்வேறு தரப்பினர் டிக்கெட் முன்பதிவு செய்து நேற்று நிகழ்ச்சியை காணுவதற்காக ரசிகர்கள் வந்திருந்தார்கள். வந்த இடத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமை, முறையான வாகன பார்க்கிங் வசதி இல்லாமை என  பல்வேறு சர்ச்சைகள் ஏற்பட்டது.  இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வந்து திரும்பி திரும்பி சென்ற சம்பவமும் அரங்கேறியது. இது பெரிய பிரச்சினையாக பேசப்பட்ட நிலையில் தற்பொழுது நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவிடம் விசாரணை நடத்துவதற்காக தாம்பரம் ஆணையர் அமல்ராஜ் வந்துள்ளார்.

விசாரணை நடத்துவதற்காக தாம்பரம் ஆணையர் நிகழ்ச்சி நடந்தத இடத்திற்கு வருகை புரிந்திருக்கிறார். ஆனால் நிகழ்ச்சி ஏற்பாட்டு குழுவினர் சம்பந்தப்பட்ட இடத்திற்கு இன்னும் விசாரணைக்காக ஆஜராகவில்லை. இருப்பினும் இந்த நிகழ்ச்சி நடந்த இடத்தை முழுமையாக தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் ஆய்வு செய்து,  தாம்பரம் இணை ஆணையர் மூர்த்தியிடம் ஏற்பாடு நடந்த விவரங்கள் குறித்து தகவல்களை சேகரித்து, அடுத்த கட்ட விசாரணைக்கு தயாராக இருக்கிறார். நிகழ்ச்சி ஏற்பாட்டுக் குழு வந்தவுடன் தாம்பரம் காவல் ஆணையர் அவர்களிடம் நேரடியாக விசாரணையை முன்னெடுக்க உள்ளார். இது இந்த நிகழ்ச்சி தொடர்பாக தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அவர்கள் ஒரு விரிவான அறிக்கையை தயார் செய்து தாக்கல் செய்யவும் உத்தரவிட்டிருப்பதாகவும் தகவல் தெரிய வந்திருக்கிறது.