தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். இவருக்கு திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தை இருக்கும் நிலையில் குழந்தை பிறந்த பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். அந்த வகையில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் காஜல் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது குலேபகாவலி மற்றும் ஜாக்பாட் போன்ற படங்களை இயக்கிய கல்யாண் இயக்கத்தில் கோஷ்டி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தில் காஜல் இரட்டை வேடங்களில் நடித்துள்ள நிலையில், கே.எஸ் ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, தங்கதுரை, ஆடுகளம் நரேன், ராதிகா, மயில்சாமி, ஊர்வசி, ராஜேந்திரன் மற்றும் மனோபாலா போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ள நிலையில், சீட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் தற்போது கோஷ்டி திரைப்படத்தின் டிரைலர் வீடியோ வெளியாகி உள்ளது. மேலும் இந்த டிரைலர் வீடியோ தற்போது ரசிகர்களை கவர்ந்து சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.