தமிழ் சினிமாவில் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லீ. இந்த படத்திற்குப் பிறகு விஜயுடன் சேர்ந்து தெறி, பிகில், மெர்சல் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தார் அட்லீ. தற்போது பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை வைத்து ஜவான் என்ற திரைப்படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கும் நிலையில் பிரியாமணி, யோகி பாபு, மன்சூர் அலிகான் மற்றும் விஜய் சேதுபதி போன்றோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் விஜய் அல்லது ராம்சரண் ஆகியோரில் ஒருவர் நடிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜவான் திரைப்படத்தின் 5 செகண்ட் காட்சிகள் இணையதளத்தில் தற்போது லீக் ஆகியுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்ட நிலையில் படக்குழு அந்த வீடியோவை டெலிட் செய்து விட்டது. ஆனால் 5 செகண்ட் வீடியோ காட்சிகளை பார்த்தவர்கள் ஜவான் திரைப்படம் சூப்பராக இருக்கிறது என்றும் 5 செகண்ட் காட்சிகளே இப்படி இருக்கும்போது டிரைலர் மற்றும் டீசர் வீடியோக்கள் எப்படி இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். மேலும் ஜவான் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கும் நிலையில் திடீரென படத்தின் காட்சிகள் லீக் ஆனது படக்குழுவினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.