
இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெறுகிறது..
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்று விளையாடுகிறது இலங்கை அணி. இதில் பங்கேற்பதற்காக தசுன் ஷானகா தலைமையிலான இலங்கை அணி வீரர்கள் நேற்று கொழும்பிலிருந்து விமானம் மூலம் மும்பைக்கு வந்து மும்முரமாக பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.. இந்நிலையில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது..
இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. எனவே கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், அதிரடி பேட்ஸ்மேன் சூர்ய குமார் யாதவ் துணை கேப்டனாகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் ஐபிஎல் ஏலத்தில் கோடிகளில் ஏலம் போன இளம் வேகபந்துவீச்சாளர்களான சிவம் மாவி, முகேஷ் குமார் ஆகியோர் புது வீரர்களாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர்..
இலங்கை டி20 போட்டிகளுக்கான இந்திய அணி :
ஹர்திக் பாண்டியா (C), சூர்யகுமார் யாதவ் (VC), இஷான் கிஷன் (WK), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மான் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்ஷல் படேல், உம்ரான் மாலிக், சிவம் மாவி, முகேஷ் குமார்.
இந்திய டி20 போட்டிகளுக்கான இலங்கை அணி :
தசுன் ஷானகா (கேப்டன்), பதும் நிஷாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, சரித் அசலங்கா, தனஞ்சய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, சாமிக்க கருணாரத்னே, சதீர சமரவிக்ரம், குசல் மெண்டிஸ், பானுக ராஜபக்ஷ, அஷேன் பண்டாரா, மஹீஷ் தீக்ஷன, டில்ஷான் மதுஷங்கா, கசுன் ராஜிதா, துனித் வெல்லலகே, பிரமோத் மதுஷான், லஹிரு குமாரா, நுவான் துஷாரா.