காயத்திலிருந்து மீண்டதை அடுத்து இலங்கைக்கு எதிரான ஒரு நாள் அணியில் ஜஸ்ட் பிரீட் பும்ரா இடம் பிடித்திருக்கிறார்.இலங்கை அணிக்கு எதிராக இந்திய அணி மோதும் ஒருநாள் தொடர் நடைபெற இருக்கின்றது.இதில் விளையாட இருக்கும் வீரர்கள்  குறித்த விவரங்களை தற்போது வெளியாகி உள்ளது. அதில் காயம் காரணமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த இந்திய நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ரா மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் கூட பும்ரா இடம்பெறாத நிலையில் தற்போது முழு உடல் தகுதியுடன் இருப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் கில், ராகுல், ஸ்ரேஷ் ஐயர், சூரியகுமார் ஆகிருக்கும் இடம் கிடைத்துள்ளது. தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர்ரும் அணியில் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.