இந்திய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவர் சவுரவ்  கங்குலி தற்போது ஐபிஎல் இல் புகுந்துள்ளார். பிசிசிஐ தலைவராக இருந்த கங்குலி,  அந்த பொறுப்பில் இருந்து கடந்த அக்டோபர் மாதம் விலகினார். ஏப்ரல் மாதம் தொடங்க உள்ள 16வது ஐபிஎல் சீசனில் அவர் டெல்லி அணியின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு கங்குலி ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.