பவுண்டரிக்கு வெளியே கேட்சை பிடித்து விட்டு உயர தூக்கி வீசி மீண்டும் அதை தூக்கி பவுண்டரி எல்லைக்கு உள்ளே வீசி மைக்கேல் கேட்ச் பிடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் ஐ.பி.எல் தொடரை போன்று ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் பிக் பாஷ் டி20 லீக்கும் பிரபலமான தொடராகும். இந்நிலையில்  தற்போது பிக் பாஷ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றது. இதில் சிட்னி சிக்ஸர்ஸ் மற்றும் பிரிஸ்னி ஹீட் அணிகள் நேற்று முன்தினம் மோதியது. இதில் டாஸ் வென்ற பிரிஸ்னி ஹீட் அணி 20 அவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 224 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து சிட்னி சிக்ஸர்ஸ் அணி களமிறங்கி ஆடி  20 ஓவர் முடிவில் 209 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் பிரிஸ்னி ஹீட் அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது சிட்னி சிக்ஸர்ஸ் அணி வெற்றி பெறுவதற்கு 11 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற பரபரப்பான சூழல் நிலவியது. அப்போது களத்தில் இருந்த சிட்னி அணியின் பேட்ஸ்மேன் ஜோர்டன் ஸ்கில் லாங் என்பவர் 19 ஆவது அவரின் 2ஆவது பந்தை லாங் ஆப் திசையில் தூக்கி அடித்தார். அந்த பந்து எல்லைக்கோடு அருகே சென்றபோது அங்கு ஃபீலிங் செய்து கொண்டிருந்த பிரிஸ்னி ஹீட் அணி வீரர் மைக்கேல் நெசர் வேகமாக ஓடிவந்து அந்த பந்தை பிடித்து மேலே தூக்கி போட்டு விட்டு பவுண்டரி எல்லைக்கு வெளியே சென்றுவிட்டார். தூக்கி போட்ட பந்தும் பவுண்டரி எல்லைக்கு வெளியே  மேலே சென்று வர மீண்டும் பௌண்டரி எல்லைக்கு வெளியே நின்று பந்தை துள்ளி குதித்து பிடித்து அப்படியே கால் தரையில் படாதவாறு தூக்கி  வீசிவிட்டு உள்ளே வந்து பந்தை மீண்டும் பிடித்தார்.

அவர் எல்லைக்கு வெளியே சென்று மறுபடியும் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தட்டிவிட்டு கேட்ச் பிடித்த நிகழ்வை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதே நேரத்தில் இது கேட்ச் அவுட்டா? அல்லது சிக்ஸரா? என்று குழப்பமும், பரபரப்பும் ஏற்பட்டது. 3ஆவது அம்பெயர் ஆய்வு செய்து பின் அவர் அவுட் என அறிவித்தார். இதனால் பேட்டர் சில்க் சற்று அதிர்ச்சியடைந்தார். இந்த நிகழ்வு விவாதமாக மாறி உள்ளது. போட்டி நடந்த பின்பும் இது குறித்து இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. பவுண்டரிக்கு வெளியே கேட்சை பிடித்து விட்டு வானத்தில் தூக்கி வீசி மீண்டும் அதை தூக்கி பவுண்டரி எல்லைக்கு உள்ளே வீசியது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சில ரசிகர்கள் அவுட் என்றும், சிலர் சிக்ஸ் என்றும் கருத்துக்களை கூறி வருகின்றனர்.

இந்நிலையில் கேட்ச் அவுட் கொடுத்தது ஏன் என்பது பற்றி மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் விளக்கமளித்துள்ளது. அதாவது, மெல்போர்ன் கிரிக்கெட் கிளப் சட்டப்படி, முதலில் கேட்ச் பவுண்டரி எல்லைக்கு உள்ளே பிடிக்கப்பட்டது.  பின் பீல்டர் பந்தையும், பவுண்டரி எல்லைக்கு வெளியே உள்ள தரை பகுதியையும் ஒரே நேரத்தில் தொடவில்லை. எனவே அது கேட்ச் என்று முடிவு செய்யப்பட்டு அவுட்டு வழங்கப்பட்டது என விளக்கம் கொடுத்துள்ளது.