டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலையில் உள்ளது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையே 3வது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் இந்திய நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது. அதே சமயம், இந்தப் போட்டிக்கான இரு அணிகளும் விளையாடும் 11 பேரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

முன்னதாக நேற்று இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “எங்கள் சில வீரர்கள் உடல்நிலை சரியில்லாமல் உள்ளனர், மேலும் சில வீரர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளனர், மேலும் அவர்கள் தேர்வுக்கு வரமாட்டார்கள்.” இது தவிர சில வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது எங்களிடம் 13 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்” என்றார்.

மேலும் அவர் கூறுகையில், “சுப்மன் கில்லுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ஷமி, ஹர்திக் மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியுள்ளனர். இந்த போட்டியில் அக்சர் படேல் இல்லை. சில வீரர்கள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதனால் அணியில் நிச்சயமற்ற நிலை உள்ளது, இந்த விஷயத்தில் எங்களால் எதுவும் செய்ய முடியாது” என தெரிவித்தார். இந்நிலையில் ஆடும் லெவனில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், முதல் 2 போட்டிகளில் காயத்தால் ஆடாத கிளென் மேக்ஸ்வெல் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் ஆஸ்திரேலிய அணியின் ஆடும் 11-க்கு திரும்பியுள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய அணி களமிறங்கி ஆடி வருகிறது.

இந்திய அணியின்  லெவன் :

ரோஹித் சர்மா (கே), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா

ஆஸ்திரேலிய அணியின் லெவன் :

டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லாபுசாக்னே, கிளென் மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி(வி.கீ), கேமரூன் கிரீன், பாட் கம்மின்ஸ் (கே), மிட்செல் ஸ்டார்க், தன்வீர் சங்கா, ஜேஷ் ஹேசில்வுட்.