பார்தீவ் அஜய் பட்டியல் இந்தியா கிரிக்கெட் அணியின் வீரர் ஆவார். இடது கை பேட்ஸ்மேன் ஆன இவர் குச்சக் காப்பாளராகவும் செயல்படுகிறார். இவர் இந்தியாவிற்காக ஒரு நாள் டெஸ்ட் போட்டி மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 2018 ஆம் ஆண்டு இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். 2008 ஆம் ஆண்டு இந்தியன் தொடரில் இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். அந்த தொடரில் 13 போட்டிகளில் விளையாடி 302 ஓட்டங்கள் எடுத்தார். இவர் கடந்த வருடம் ஓய்வு பெறுவதாக 35 வயதில் தனது முடிவை அறிவித்தார்.

குஜராத் வீரர் தன்னுடைய 12 ஆண்டு கால வாழ்க்கையை சமூக ஊடகங்களில் எழுதப்பட்ட ஒரு நீண்ட இடுகையின் மூலம் முடித்துக் கொண்டார். 35 வயதான இவர் 25 டெஸ்ட்,38 ஒரு நாள் மற்றும் இரண்டு டி20 சர்வதேச போட்டிகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப் படுத்தினார். குஜராத்திற்காக 194 முதல் தர போட்டிகளில் விளையாடிய இவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய சாதனை படைத்துள்ளார். 1985 ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி பிறந்த இவர் மிகவும் துடிப்பான ஆட்டக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் பிறந்த நாள் வருகின்ற மார்ச் 9ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.