ஒவ்வொரு வருடமும் உலக கிட்னி தினம் மார்ச் மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச நெப்ராலஜி சங்கம் மற்றும் சிறுநீரக அடித்தளங்கள் சர்வதேச கூட்டமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் உலக சிறுநீரக தினம் மார்ச் மாதம் 11ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் வலி நிவாரணை மாத்திரைகள் உட்கொள்வது,நீர் வறட்சி ஆகியவற்றின் காரணமாக நாள்பட்ட சிறுநீரக நோய் ஏற்படுகிறது என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவது தான் இந்த நாளின் முக்கிய நோக்கம்.

சிறுநீரகம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீர் மூலமாக வெளியேற்றும் பணியில் ஈடுபடுகிறது. சில நேரங்களில் தவறான உணவு,மருந்து மற்றும் சுற்றுச்சூழலில் உள்ள நச்சு கூறுகள் சிறுநீரகத்தை மோசமாக பாதிக்கின்றன. அதனால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதில் இருந்து சிறுநீரக புற்றுநோய் உள்ளிட்ட நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது. இவ்வாறு நோயின் தீவிரம் அதிகரித்தால் சில நேரங்களில் சிறுநீரக செயலிழப்பு ஏற்படக்கூடும்.

இதனை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதிலும் குறிப்பாக உணவில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அதாவது அளவுக்கு அதிகமாக மது அருந்தினால் சிறுநீரகம் பாதிக்கப்படும். அதிக அளவு ஆல்கஹால் உட்கொள்வது சிறுநீரகத்தின் செயல்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்த கூடும். உங்கள் மூளையில் தாக்கத்தை ஏற்படுத்தும். உப்பில் சோடியம் அதிகமாக உள்ளதால் பொட்டாசியத்துடன் சேர்ந்து உடலில் சரியான அளவு திரவத்தை பராமரிக்கிறது.

ஆனால் உணவில் அதிக அளவு உப்பை எடுத்துக் கொண்டால் இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். சிவப்பு இறைச்சியில் அதிக அளவு புரதம் இருப்பதால் தசைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானதாகும். ஆனால் அதன் வளர்ச்சிதை மாற்ற செயல்முறை மிகவும் கடினமானது. இது சிறுநீரகங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இறைச்சியில் உள்ள புரதம் சிறுநீரகக் கற்கள் உருவாகும் அபாயத்தை அதிகரிக்கும்.எனவே இது போன்ற பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டால் சிறுநீரக பாதிப்பை தடுக்க முடியும்.