இந்தியாவின் முக்கியமான தொடர்களில் ஒன்று ஐபிஎல். அதன் பிறகு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது.  டெல்லி மற்றும் மும்பை அணி இதுவரை 32 ஐபிஎல் போட்டிகளை சந்தித்துள்ள நிலையில், டெல்லி அணி 15 முறையும் மும்பை அணி 17 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரில் ரிஷ்ப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் 5-வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது ரிஷப் பண்ட் காயம் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதால் அவர் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார்.

இதனால் இந்த வருடம் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ்  அணிக்கு புதிய கேப்டன் நியமிக்கப்படுவார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் போட்டிகள் குறித்த முழு அட்டவணை வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் லக்னோ மைதானத்தில் வைத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் மோதுகிறது. அதன் பிறகு டெல்லி அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் டெல்லி மைதானத்தில் மோதுகிறது. கவுகாத்தியில் வைத்து டெல்லி அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகிறது. டெல்லியில் வைத்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகிறது.

பெங்களூருவில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதுகிறது. டெல்லியில் வைத்து டெல்லி அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகிறது. ஹைதராபாத்தில் டெல்லி அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகிறது. அகமதாபாத்தில் குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிடல்ஸ், டெல்லியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், சென்னையில் டெல்லி கேப்பிடல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லியில் டெல்லி கேப்பிட்டல் vs பஞ்சாப் கிங்ஸ், தர்மசாலாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகிறது. மேலும் கடைசியாக டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லியில் மோதுகிறது.