அமெரிக்க நாட்டில் தொடர்ச்சியாக இரண்டாம் தடவை கேரளப்பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களில் இந்தியர்கள் நீதிபதி பதவிகளை அலங்கரித்து வருகிறார்கள். அந்த வகையில், கேரள மாநிலத்தில் இருக்கும் திருவல்லாவை சேர்ந்த ஜூலி ஏ.மேத்யூ என்ற மலையாளப்பெண் 15 ஆண்டுகளாக வக்கீலாக பணிபுரிந்து, நான்கு வருடங்களுக்கு முன் நீதிபதியாக உயர்ந்தார்.

அந்த வகையில் அந்நாட்டின் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் நீதிபதி என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. தற்போது, மீண்டும் இரண்டாம் தடவையாக அவர் டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் போர்ட் பென்ட் கவுண்டில் நீதிபதியாக உள்ளார். நீதிபதிக்கான தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பாக போட்டியிட்டார்.

இதில் வெற்றி பெற்ற அவர், மேலும் நான்கு வருடங்கள் நீதிபதியாக இருப்பார். நீதிபதியான நெகிழ்ச்சியுடன் அவர் தெரிவித்ததாவது, இது தான் என் சிறப்பான பணி. இந்த பணியை மிகவும் விரும்புகிறேன். பெற்றோர், கணவர் என்று அனைவருமே எனக்கு மிகச்சிறந்த ஆதரவை தெரிவித்து தூண்களாக திகழ்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.