ஜப்பானின் முக்கிய நகரமாக விளங்கும் டோக்கியோவில் மக்கள் தொகை தற்போது கட்டுக்கடங்காமல் செல்கின்றது. அதனால் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் விதமாக டோக்கியோவை விட்டு தாங்களாக முன்வந்து வெளியேறுபவர்களுக்கு 10 லட்சம் யென் ரூபாய் அதாவது இந்திய மதிப்பில் 6.35 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்று ஜப்பான் நாட்டு அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் மக்களுக்கு கொடுக்கப்பட உள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதலில் அதிக முதியோர் வாழும் குறைந்த பிறப்பு விகிதம் உள்ள நகரங்களில் மக்களை குடியமர்த்தும் பணியை ஜப்பான் அரசு மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.