
ஆஸ்திரேலிய அன்னிக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இருந்து விலகுவதாக இந்திய வீரர் ஸ்ரேயஸ் ஐயர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பார்டர் கவாஸ்கர் போட்டி நடந்து கொண்டிருந்த போதும் ஸ்ரேயஸ் ஐயர் முதுகு வலி காரணமாக திடீரென போட்டியிலிருந்து விலகினார். இந்நிலையில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு இடையேயான ஒரு நாள் போட்டி மார்ச் 17-ம் தேதி நடைபெற இருக்கிறது.
இந்த போட்டியில் இருந்து ஸ்ரேயஸ் ஐயர் விலகியதால், அவருக்கு பதில் மாற்று வீரரை பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் டெஸ்ட் தொடரில் கேப்டன் ரோஹித் சர்மாவும் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.