சீன நாட்டில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருவதால், இந்திய மருந்து பொருட்களின் தேவை அங்கு பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன நாட்டில் சமீப நாட்களாக கொரோனா தொற்று தீவிரமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதன் காரணமாக, பலி எண்ணிக்கையும், மருத்துவமனையில் சிகிச்சை பெரும் நபர்களின் எண்ணிக்கையும் பல மடங்காக அதிகரித்திருக்கிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சீன அரசாங்கம் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் அங்கு இந்திய நாட்டின் தயாரிப்பான, மல்நட்ரிஸ், மல்னுநெட், பக்சிஸ்டா மற்றும் பிரிமொவிர் ஆகிய நான்கு கொரோனா தடுப்பு மருந்துகள் அதிக அளவில் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன அரசு இந்த மருந்துகளை உபயோகிக்க அனுமதி வழங்கவில்லை. எனினும், இணையதளத்தின் மூலமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மருந்துகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.