தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கி வரும் “இந்தியன் 2” சூட்டிங் இப்போது மும்முரமாக நடந்து வருகிறது. இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த விவேக், நெடுமுடி வேணு ஆகிய இரண்டு பேரும் மறைந்து விட்டனர். இதன் காரணமாக அவர்கள் நடித்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதில் வேறு நடிகர்களை நடிக்க வைக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியது.

இந்த நிலையில் நவனீ டெக்னாலாஜி வாயிலாக மீண்டும் இப்படத்தில் விவேக்கை கொண்டுவர ஷங்கர் எண்ணியுள்ளார். இவரைபோல் நடிகர் நெடுமுடி வேணுவையும் நவீன டெக்னாலாஜியில் திரையில் கொண்டுவர உள்ளார் ஷங்கர். அதோடு அவர்களின் குரலிலேயே டப்பிங் பேசுவதற்கும் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்களாம். இதனால் இறந்துபோன இரண்டு கலைஞர்களை தனது படத்தில் மீண்டும் உயிர்த்தெழ வைக்கபோகிறார் இயக்குனர் ஷங்கர்.