சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் மற்றும் வீராங்கனைகள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆசிய விளையாட்டு போட்டியில் மகளிருக்கான 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்தியாவுக்கு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இந்திய வீராங்கனை பாருல் சவுத்ரி 5000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார். ஆசிய விளையாட்டில் இதுவரை 14 தங்க பதக்கங்களை வென்றுள்ளது இந்தியா.