சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற *ஸ்ரீராம இன் தமிழகம்* புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர், “ராமரை நீக்கிவிட்டால் இந்தியா என்ற நாடே இல்லை” என்று கூறி, ராமரின் பின்புலத்தை மக்களிடமிருந்து நீக்க முடியாது என்றும், ராமரின் சக்தி அனைவரையும் ஒருங்கிணைக்கும் சக்தியாக உள்ளது என்றும் கூறியுள்ளார்.
ஆளுநர் பதவியேற்றதிலிருந்து ஆர்.என். ரவிக்கும், தமிழ்நாடு அரசியலமைப்புக்கும் இடையே கருத்து மோதல் நிலவுகிறது. குறிப்பாக சனாதன தர்மம் மற்றும் பக்தி சம்பந்தமாக அவர் கூறிய கருத்துக்கள் தமிழக அரசியலில் அதிக விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. ரவியின் சமீபத்திய பேச்சுகள் திராவிட சிந்தனைகளுக்கு எதிரானதாக கூறி, திமுகவினர்கள் பலமுறை கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
ஆர்என்.ரவி தொடர்ந்து சனாதனம் மற்றும் தர்மம் பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்தி, அதனை பாரதத்தின் அடிப்படையாக கூறி வருவது, தமிழக அரசியலில் தொடர்ந்து விவாதத்திற்கு ஆளாகி வருகிறது.