
கடந்த ஜூன் மாதம் கனடாவில் வைத்து காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் இந்திய அரசின் தொடர்பு இந்த கொலையில் உள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டின் அந்நாட்டின் பாராளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்தியா கன்னடா உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டதால் விசா ஒப்புதல் உள்ளிட்ட சேவைகளும் சற்று காலத்திற்கு முடங்கின. பின்னர் இரு நாட்டு உறவும் சுமூகமாகும் சூழலுக்கு திரும்பிக் கொண்டிருந்த நிலையில் தற்போது அந்த கொலை பிரச்சனையை கனடா மீண்டும் கிளறியுள்ளது.
அதாவது அந்த கொலையில் இந்திய தூதருக்கு தொடர்பு உள்ளதாக தற்போது கனடா குற்றம் சாட்டியுள்ளது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான தூதரக உறவு மீண்டும் விரிசல் ஏற்பட்டது. அதோடு கனடாவில் இந்திய அரசின் வன்முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்திய தூதர்கள் பணியாற்றினர் என்பதற்கான சான்றுகளை அந்நாட்டு காவல்துறையினர் சேகரித்து உள்ளதால் அந்நாடு குற்ற சாட்டை தெரிவித்துள்ளனர். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்தது. மேலும் கனடாவின் தூதர் ஸ்டுவர்ஸ் வீலருக்கு இன்று சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
அந்நாட்டிலுள்ள இந்திய தூதர் மற்றும் பிற தூதராக அதிகாரிகளின் மீது அடிப்படையற்ற வகையில் குற்றசாட்டுகளை சுமத்துவது என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள இந்திய தூதர்களை திரும்பப் பெறுவதற்காக தெரிவித்த மத்திய அரசு ஸ்டுவர்ஸ் வீலர் உட்பட இந்தியாவில் உள்ள கனடாவுக்கான தூதர்கள் 6 பேரை வரும் 19ஆம் தேதிக்குள் வெளியேற்ற வேண்டும் என்றும் அதிரடியாக உத்தரவிட்டது. இதனால் கனடா மற்றும் இந்தியா இடையே தூதராக அளவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.