பாஜக அரசுக்கு எதிராக 26 கட்சிகள் அடங்கிய INDIA கூட்டணியின் கூட்டம் இரண்டு முறை நடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது கூட்டம் மும்பையில் இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ளது. இந்நிலையில் திமுக தலைவராக 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழக முதலமைச்சர் ஸ்டாலின், இந்தியா என்ற பெயரை கேட்டாலே ஒன்றிய பாஜக அரசு அலறக்கூடிய நிலை உருவாகியுள்ளது. உண்மையான இந்தியா நம் பக்கம் தான் உள்ளது. அந்த இந்தியா தான் இந்தியாவுக்கு விடியலை தரக்கூடிய வலிமை கொண்டதாக 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திகழும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்