ஸ்மார்ட் சிட்டி திட்டமானது தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கோவை மாநகராட்சியில் இந்த பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. கோவையை அழகாக்கும் முயற்சியில் தொடர்ந்து மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. அதன்படி அங்கிருக்கும் குளங்கள் மற்றும் சாலையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. தொடர்ந்து பல முயற்சிகளை கோவை மாநகராட்சி சார்பாக எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவின் ஸ்மார்ட் சிட்டிக்கான விருது பட்டியலில் கோவை மாவட்டம் முதல் இடத்தில் பிடித்துள்ளது. அதன்பிறகு இரண்டாவது இடத்தில் இந்தூர், மூன்றாவது இடத்தில் நியூ டவுன், கொல்கத்தா மற்றும் நான்காவது இடத்தில் கான்பூர் உள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 55 நகரங்கள் கலந்து கொண்ட நிலையில் முதலாவதாக கோவை மாநகராட்சி இந்த விருதை தட்டி சென்றது. தமிழகத்தில் வேறு எந்த மாவட்டத்திற்கும் கிடைக்கவில்லை.