இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் ஜியோ சினிமா தளத்தில் இலவசமாக பார்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகளை ஆங்கிலம், இந்தி, தமிழ், மராத்தி, குஜராத்தி, வங்காளம், போஜ்புரி, பஞ்சாபி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 11 மொழிகளில் பார்க்கலாம். மேலும் தொலைக்காட்சி மூலமாக ஸ்போர்ட்ஸ் 8, கலர்ஸ் cineplex சேனல்களில் கண்டு ரசிக்கலாம். இந்த டி20 தொடர் ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது.