மேற்குவந்த மாநிலத்தில் அகவிலைப்படி உயர்வை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் 100 நாளை தாண்டியும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியின் வீட்டிற்கு அருகேயும் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் அனுமதியோடு கொல்கத்தா வீதிகளிலும் மாநில அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடி அரசு ஊழியர்கள் பேரணியாக சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 6 சதவீதம் அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

பட்ஜெட் தாக்கலின் போது 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என நிதி அமைச்சர் அறிவித்தார். ஆனால் ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்குவது போன்று 42 சதவீத அகவிலைப்படி உயர்வை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி ஏற்கனவே எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு உயர்த்தப்பட்டுள்ளது. இதற்காக 20000 கோடி செலவு செய்யப்படுகிறது. எனவே இனியும் அகவிலைப்படைடியை உயர்த்த முடியாது என தெளிவாக கூறிவிட்டார். மேலும் இதன் காரணமாக தான் தற்போது அரசு ஊழியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.