பிளக்ஸ் இந்தியா வாகன உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புள்ள இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.

சென்னை மற்றும் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பிளக்ஸ் இந்தியா நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் இன்று காலை 8 மணி இருந்து சோதனை நடத்தி வருகின்றார்கள். பிளக்ஸ் இந்தியா நிறுவனம் சார் உதிரி பாகங்கள் தயாரிக்கின்ற நிறுவனமாகும்.  இந்த நிறுவனத்தில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் நடத்தி வருகிறார்கள்.

குறிப்பாக ஓஎம்ஆர் சாலையில் உள்ள கந்தன் சாவடி பகுதியிலும்,  அதேபோன்று ஆவடி பகுதியிலும், ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் பகுதிகள்  உட்பட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தி  வருகின்றார்கள்.