சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சுமார் 90 இடங்களில் வருமானவரித்துறை  சோதனை நடைபெற்று வருகின்றது. முழுக்க முழுக்க வரி ஏய்ப்பு செய்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையை அதிகாரிகள் மேற்கிண்டு வருகின்றனர். எம்.பி ஜெகத்ரட்சகன் தொடர்புரடைய 50 இடங்களில் வருமான வரித்துறை சோதனைகள் நடத்தி வருகின்ற அதே வேளையில் சவிதா கல்வி நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களிலும்  இன்று காலையில் இருந்து சோதனை நடைபெற்று வருகின்றது.