செய்தியாளர்களிடம் பேசிய  தேமுதிகவின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், 2011வரை செம ஸ்டராங்கா இருந்தோம்.. 2011 வரைக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகம் யாருடனும் கூட்டணி இல்லாமல்,  தனியாக களம் கண்டவரை தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் அபரிதமான ஒரு வளர்ச்சி,  சக்தி எல்லோருக்கும் தெரியவந்தது. ஏனென்றால்  ஒட்டுமொத்தமான வாக்கு வங்கியும்,  சிங்கிளா தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு கிடைத்த போது முதல் தேர்தலில் 8.33ம்  அடுத்தது 10.38% வாக்குகள் வாங்கும் பொழுது ஒரு மிகப்பெரிய சக்தியாக இருந்தது.

2013க்கு பிறகு நாங்கள் கூட்டணி என்று சென்ற பிறகு நாங்கள் போட்டியிடும் தொகுதிகளை தவிர மற்ற தொகுதிகளின் உடைய எண்ணிக்கை இதில் சேராதது…..  அப்போது  கேப்டனும் சரி, பல சவால்கள்….. கூடவே இருந்து கேப்டன் சந்தித்து துரோகங்கள். எதிர்க்கட்சித் தலைவரான  மூன்று மாதத்தில் அவர்  யாரெல்லாம் நம்பி எம்எல்ஏ பதவி கொடுத்தாரோ,  அவர்கள் எல்லாம் கேப்டன் முதுகில் குத்திட்டு அவர்கள் செய்த துரோகம் அதற்கு பிறகு செய்த ஒவ்வொரு விஷயமும்…

ஒரு பெரிய சருக்களை கேப்டனுக்கும்,  தேமுதிகவிற்கும் கொடுத்துச்சு. அன்னைக்கு கேப்டனுக்கு கொடுத்த வலி  தான் இன்றைக்கு ஹெல்த் கண்டிஷனில் கொண்டு போய் சேர்த்து இருக்கு. ஆனால் கேப்டன் யாருடனும் கூட்டணி வைக்கக் கூடாது என்று உறுதியோடு இருந்தார். ஆனால் கூட்டணி வைத்தோம், எதிர்க்கட்சி தலைவராக  வந்தோம். அதன் பிறகு வந்த கூட்டணிகள் சரியாக அமையவில்லை. எப்பொழுதுமே அரசியலிலும் சரி…. வாழ்க்கையில் சரி…. வெற்றி பெறுவது ஒன்றுதான் வரலாறாக இருக்கும்.

நாம் சந்திக்கின்ற தோல்விகளோ….  நாம் சந்திக்கின்ற எதிர்ப்புகளும் வரலாறாக மாறாது. இதுவரைக்கும் நாங்கள் வெற்றிகளையும் பார்த்துட்டோம்…  தோல்விகளையும் பார்த்துவிட்டோம்…  இனிவரும் காலம் எங்களை நம்பி இருக்கின்ற கோடான கோடி தொண்டர்களுக்காக…. நிச்சயமாக தேசிய முற்போக்கு திராவிட கழகம் வெற்றி வியுகம் ஒன்றை மட்டுமே அமைப்போம்,  அதில் நிச்சயம் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று இந்த நேரத்தில் உங்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்.