உ.பி மாநிலம் பிரதாப்கர் மாவட்டச் சிறையில் சமீபத்தில் அடைக்கப்பட்ட திருநங்கைகள் சிலருக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனை முடிவுகள், சிறை நிர்வாகத்தையே அதிரவைத்துள்ளன.
பிரதாப்கர் நகரில் ‘கெத்து’ காட்டுவது மற்றும் அதிகாரத்தைக் கைப்பற்றுவது தொடர்பாக அஞ்சலி மற்றும் மிஸ்பா என்ற இரண்டு திருநங்கை குழுக்களுக்கு இடையே பயங்கர மோதல் வெடித்தது.
இந்த வன்முறை தொடர்பாக 13 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறை விதிமுறைப்படி அவர்களுக்கு நடத்தப்பட்ட ரத்தப் பரிசோதனையில், 13-ல் 7 பேருக்கு எச்.ஐ.வி (HIV) பாசிட்டிவ் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் சிறை வளாகமே பரபரப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தனி வார்டில் மாற்றப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் நடத்தப்பட்ட உடல் ரீதியான சோதனையில் மற்றொரு அதிர்ச்சி காத்திருந்தது. திருநங்கை வேடத்தில் இருந்தவர்களில் ஒருவர் அசல் ஆண் என்பது தெரியவந்தது.
அவரிடம் போலீஸார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியபோது, “எனக்குத் திருநங்கை உணர்வுகள் எல்லாம் கிடையாது; அதிக பணம் கிடைக்கும் என்பதற்காகத்தான் இவர்களோடு சேர்ந்து திருநங்கையாகவே வாழ்ந்து வருகிறேன்” என கூலாகப் பதில் அளித்துள்ளார்.
இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள சிறை கண்காணிப்பாளர் ரிஷப் திவேதி அறிவுறுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
