இந்தியர்கள் என்றாலே சுற்றுலாப்பிரியர்கள் தான். அதிலும் கடந்த 2025-ஆம் ஆண்டில் வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குறிப்பாக, விசா நடைமுறைகள் எளிதாக்கப்பட்ட நாடுகளுக்கே இந்தியர்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தாய்லாந்து மற்றும் துபாய் (யுஏஇ) ஆகிய நாடுகள் வழக்கம் போல முன்னிலையில் உள்ளன.
தாய்லாந்து & வியட்நாம்: குறைந்த செலவில் சொகுசான பயணம் செய்ய முடிவதால், நடுத்தர வர்க்கத்தினரின் ஃபேவரிட் இடங்களாக இவை மாறியுள்ளன.
துபாய்: ஷாப்பிங் மற்றும் நவீன கட்டிடக்கலையை ரசிக்க இந்தியர்கள் அதிகளவில் துபாயைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.
மலேசியா & இலங்கை: விசா இல்லா பயணம் அல்லது ‘விசா ஆன் அரைவல்’ (Visa on arrival) வசதி இருப்பதால், கடைசி நேரத் திட்டமிடலில் இந்த நாடுகள் முதலிடம் பிடிக்கின்றன.
இந்தோனேசியா (பாலி): தேனிலவு ஜோடிகளின் சொர்க்கமாக பாலித் தீவுகள் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கின்றன.
முன்பெல்லாம் லண்டன், அமெரிக்கா என்று திட்டமிட்ட இந்தியர்கள், இப்போது ஆசிய நாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இதற்கு முக்கியக் காரணம், பல நாடுகள் இந்தியர்களுக்கு விசா விலக்கு அளித்தது தான். மேலும், குறைந்த நேர விமானப் பயணம் மற்றும் இந்திய உணவுகள் தாராளமாகக் கிடைப்பதும் இந்தியர்களை இந்த நாடுகளுக்கு ஈர்க்கின்றன.
