இன்ஸ்டாகிராமில் ‘ஆஸ்திரேலிய பாய்’ (Aussie Bhai) என அழைக்கப்படும் ஆண்டி எவன்ஸ், டெல்லியில் தான் வசிக்கும் வீட்டில் உள்ள ஏர் ப்யூரிஃபையரை (Air Purifier) சுத்தம் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டிய அந்த ஏர் ப்யூரிஃபையரின் ஃபில்டர், வெறும் 2 மாதங்களில் கரிக்கட்டை போலக் கருப்பாக மாறியுள்ளதைப் பார்த்து அவரே மிரண்டு போயுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Aussie Bhai | Andy Evans (@theaussiebhai)

“பாருங்கள் நண்பர்களே.. டெல்லியில் தங்கியிருந்த 2 மாதங்களில் ஒரு ஃபில்டர் இப்படித்தான் மாறியுள்ளது. இது ஒரு தடிமனான தூசிப் போர்வை போல இருக்கிறது” என அவர் வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், “உடல்நலம் முக்கியம் என நினைத்தால் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேறுங்கள்” எனப் பதறியுள்ளனர்.

மற்ற சிலரோ, “இதனை ஒரு ஸ்வெட்டராகக் கூடத் தைக்கலாம் போலயே” என டெல்லியின் காற்று மாசை கிண்டலடித்து வருகின்றனர். டெல்லியில் தற்போது கடும் குளிருடன் காற்று மாசும் (AQI 300-ஐ கடந்து) அதிகரித்து வரும் நிலையில், இந்த வீடியோ ‘மரண பயத்தை’ காட்டியுள்ளது.