செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை, இன்னைக்கு பிஜேபி தமிழ் நாட்டில்  பல இடத்தில் ஜெயிக்க போகுது. ஏற்கனவே சொன்னது போல 2024 பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட் வந்தபோது நீங்க பார்ப்பீங்க. நான் எந்த கட்சியும் குறைத்து சொல்லல. எந்த கட்சியையும் உயர்த்தி சொல்லல.  நான் பாரதிய ஜனதா கட்சியை பற்றி பேசுகிறேன்.

டெய்லி 25 ஆயிரம் பேர் களத்தில் பார்க்கிறேன். 60 நாட்களாக களத்தில் இருக்கிறேன். மக்கள் கிட்ட பேசுறேன். எல்லா தரப்பட்ட மக்கள் கிட்ட பேசுறேன். எனக்கு பல்ஸ் தெரியும். நான் உறுதியா இருக்கேன். கிரவுண்ட் எந்த பக்கம் சிப்ட் ஆச்சுன்னு தெளிவா இருக்கேன். மறுபடியும் சொல்றேன்.

57% வாக்காளர்கள் 35 வயசுக்கு கீழே. அவங்க மனநிலை வேற ? என்ன ஓட்டம் பெற ? திங்கிங் வேற ? அவங்க பாலிடிக்ஸ் வேற ? அவங்க இந்த  பழைய பஞ்சாங்கம் பாலிடிக்ஸ்சுக்கு எல்லாம் இளைஞர்கள் தயாராக இல்லை. அவங்க புது புரட்சிக்காக காத்திருக்கிறார்கள்.

எதனை எண்ணிக்கையில் வெற்றி பெறுவோம் என தேர்தலில் பாருங்கள். 39 என சொன்னால் உங்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும். உங்க எடிட்டருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிடும். எதுக்கு சில நம்பர் எல்லாம் சொல்லிக்கிட்டு.  25க்கு மேல கூட இருக்கலாம் இல்லையா ?  யாத்திரைக்கு அப்புறம் 25க்கு மேல கூட இருக்கலாம் இல்லையா ? சொன்னால் சில பேருக்கு சென்னைல குளிர் காய்ச்சல்,  ஜுரம் வந்துரும்.  எதுக்கு சொல்லணும் ? அதை வைத்து ஒரு வாரம் டிபேட் நடத்துவாங்க. 7 மணிக்கு பிரேம் டிபேட். பாஜக சொன்ன நம்பர் கிடைக்குமா ? அதுக்கு ஒரு நாலு பேர் கருத்து. அதுக்கு ஒரு கருத்துக்கணிப்பு. அதற்கு ஒரு ட்விட்டர் போல் என தெரிவித்தார்.