இந்தியாவின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவர் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. இவர் ஒரு தொழிலதிபராக இருந்தாலும் சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார். மக்களை ஊக்கப்படுத்தும் விதமான பல்வேறு கருத்துகளை ஆனந்த் மஹிந்திரா அவ்வப்போது வெளியிடுவார். அந்த வகையில் நேற்று தண்ணீர் மீது குதிரை ஓடுவது போன்ற ஒரு வீடியோவை ஆனந்த் மஹிந்திரா தன்னுடைய twitter இல் வெளியிட்டுள்ளார்.
அதோடு உங்கள் மேல் நம்பிக்கை இருந்தால் நீங்களும் தண்ணீரில் நடக்கலாம். எல்லாவற்றுக்கும் மனம் தான் முக்கியம். உங்கள் மீதும் உங்களுடைய கனவுகள் மீதும் நம்பிக்கை வைத்து இந்த வாரத்தை தொடங்குங்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும் ஆனந்த் மஹிந்திரா நல்லதொரு கருத்தை பகிர்ந்த நிலையிலும் அவர் தண்ணீர் மீது குதிரை ஓடுவது போன்ற ஒரு வீடியோவை வைத்துள்ளதால் தண்ணீர் மீது குதிரை ஓடுமா என்று நெட்டிசன்கள் பலரும் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
You too can walk on water if you believe you can. It’s all in the mind. 😊 Start your week believing in yourself and your aspirations. #MondayMotivation
pic.twitter.com/qh6h3mEVtw— anand mahindra (@anandmahindra) March 6, 2023