நம் நாட்டில் கொரோனா தாக்கம் இப்போது தான் குறைந்து வரும் நிலையில், பருவ நிலை மாற்றம் காரணமாக இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் அதிகமாக பரவி வருகிறது என ஐசிஏஆர் தெரிவித்திருக்கிறது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2 வாரங்களுக்கு கடும் காய்ச்சல், சளி, இருமல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இப்போது தினசரி பலர் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்த நிலையில் இதுபற்றி முன்னாள் ஏய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் ஒன்றை அளித்து உள்ளார். அதாவது, இன்புளூயன்சா எச்3என்2 வகை வைரஸ் எச்1என்1 வைரசின் மாறுபாடடைந்த வைரஸ் என தெரிவித்து உள்ளார். இந்த வைரஸ் கொரோனா போன்று வேகமாக பரவக்கூடியது என்றும்  இதனால் முகக்கவசம் அணிந்தும், அடிக்கடி கைகளை கழுவி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.