காங்கிரஸ் கட்சிக்கு எம்.பி ராகுல் காந்தி கடந்த வருடம் புதிய ஒளியினை கொடுத்ததாக சிவசேனா  கட்சியின் எம்பி சஞ்சய் ரௌத் தெரிவித்துள்ளார். அதன்பிறகு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் பிரிவினைவாத கருத்துக்களை பரப்ப கூடாது என்றும் தெரிவித்துள்ளார். இது குறித்து சிவசேனா பத்திரிக்கையில் எம்பி சஞ்சய் ரௌத் கூறியிருப்பதாவது ராமர் கோவில் விவகாரம் தற்போது முடிவடைந்து விட்டதால் பாஜக தற்போது லவ் ஜிகாத் என்ற ஆயுதத்தை தேர்தல் வெற்றிக்காக கையில் எடுத்துள்ளது.

இதை வெற்றிக்காகவும், இந்துக்களிடம் அச்சத்தை ஏற்படுத்துவதற்காகவும் பயன்படுத்துகிறதா? நடிகை துனிஷா ஷர்மா மற்றும் ஷ்ரத்தா இறந்தது லவ் ஜிகாத் கிடையாது. நாட்டில் உள்ள அனைத்து பெண்களும் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். இந்நிலையில் ராகுல் காந்தியின் பாதயாத்திரையின் மூலம் வருகிற பொது தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் என்று நான் நம்புகிறேன். மேலும் இன்று மத்தியில் ஆளும் பாஜக எதிர்க்கட்சிகளை அங்கீகரிக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.