பல்கேரியா நாட்டைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பாபா வங்கா. இவர் சிறு வயதில் மோசமான புயலில் சிக்கி காணாமல் போய் உள்ளார். அதன் பின் பல நாட்களுக்குப் பின் குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டார். இவர் தன்னுடைய 84 வது வயதில் 1996 ஆம் வருடம் காலமாகியுள்ளார். இவரை நாஸ்ட்ரடாம்ஸ் என அழைத்தனர். ஏனென்றால் இவர் எதிர்காலத்தை குறித்து கணித்ததில் 85 சதவீதம் சரியாக நடைபெற்றதாக கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, செர்னோபில் அணு உலை விபத்து, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், புதிதாக கருப்பின அதிபர் போன்றவை அதில் அடங்கும்.

ஆனால் இவருடைய கணிப்புகள் இன்று வரை உலகத்தை உலுக்கி வருகிறது. அதாவது வளர்ந்த நாடு ஒன்று பயோ தாக்குதலில் ஈடுபடும் என கூறியிருந்தார். தற்போது இதை வைத்து பார்க்கும் போது உக்ரைன் மீதான அணுகுண்டு தாக்குதல் நடத்தப்படும் என ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்தும் அதன் தொடர்ச்சியாக உக்ரைன் -ரஷ்யா போர் நடைபெற்று வருவதும் ஒத்துப்போகிறது. இந்த நிலையில் தற்போது 2023-ஆம் ஆண்டின் புத்தாண்டு இன்று தொடங்கியுள்ளது. இந்த வருடத்தில் என்னென்ன நிகழ்வுகள் நடக்கும் என்பதை அவர் கணித்துள்ளார்.

அந்த வகையில் “சோலார் சுனாமி” என்னும் பயங்கரமான நிகழ்வு ஏற்படும். அதாவது அணுகுண்டு வெடிப்பிற்கு இணையான எலக்ட்ரிக் சிக்னல்கள் சூரியனிலிருந்து பூமிக்கு நேரடியாக அனுப்பி வைக்கப்படும். இதன் மூலமாக பூமியின் காந்த புலங்கள் சிதைக்கப்பட்டு விடும். இதனால் கதிர்வீச்சு  அபாயம் உண்டாகும். தகவல் தொடர்பு துண்டிக்கப்படும். மேலும் பெரிய அளவிலான முடக்கம் ஏற்படலாம். இதனைத் தொடர்ந்து ஏலியன்ஸ் எனக் கூறப்படும் வேற்று கிரகவாசிகள் பூமிக்குள் நுழைவர். மனிதர்கள் மீது தாக்குதல் நடத்தி பல லட்சம் பேர் அழிக்கப்பட வாய்ப்புள்ளது. அதேபோல் பூமியின் சுற்றுவட்ட பாதையில் மாற்றம் ஏற்படும். அப்படி நடைபெற்றால் காலநிலை மாறுபாடு மிக மோசமான நிலையை எட்டி  விடுகிறது.

இயற்கையான முறையில் குழந்தை பெற்றுக் கொள்வது மாறி ஆய்வகங்களில் குழந்தை பெற்றுக் கொள்ளும் நிலை உருவாகும். மேலும் பிறக்கும் குழந்தைகளின் குண நலன்கள், தோல் நிறம் உட்பட பல்வேறு விஷயங்களை பெற்றோர்கள் தேர்வு செய்ய முடியும் என்ற தகவல் பெரிதும் வைரலாகி வருவதால் இந்த வருடத்தின் தொடக்கம் சற்று கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வருகிற 5079 ஆம் ஆண்டு வரை இவர் பல்வேறு கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.