இந்தியாவில் கொரோனா காலத்தின் போது ஏழை மக்கள் பாதிப்படைய கூடாது என்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய அரசால் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டம் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒவ்வொருவருக்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் தலா 5 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த நிலையில், திட்டத்தை 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீடித்தது.

இந்த திட்டம் டிசம்பர் 31-ம் தேதியோடு காலாவதியான நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் கரீப்  கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தை மேலும் ஒரு வருடத்திற்கு நீட்டிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது. மேலும் கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டமானது நடப்பாண்டில் ஜனவரி 1-ம் தேதி முதல் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது ‌