சேலம் அஸ்தம்பட்டியில் அதிமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசிய தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், அதிமுகவின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி, நம்முடைய ஏழை குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவி கனவு டாக்டராக வேண்டும். பல் மருத்துவராக வேண்டும். ஆகவே அப்படிப்பட்ட மாணவர்களுடைய கனவை நினைவாக்க வேண்டும் என்பதற்காக அம்மாவுடைய அரசாங்கம்…

அரசு பள்ளியிலே படிக்கின்ற மாணவ செல்வங்கள் பெரும்பாலும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அவர்களுடைய கனவு நினைவாக வேண்டும் என்பதற்காக… எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைக்கவில்லை… பொதுமக்கள் கோரிக்கை வைக்கவில்லை…. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமே இந்த திட்டத்தை கொண்டு வந்தது.  நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் 7.5% உள் ஒதுக்கிடை கொண்டு வந்து, சட்டம் இயற்றப்பட்டு, அமல்படுத்தப்பட்டு, இன்றைய தினம் பல் மருத்துவ கல்வி 2164 பேர் நான்கு ஆண்டுகளில் படிக்கிறார்கள்…

அத்தனையும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், கூலி தொழிலாளி,அன்றாட வேலைக்கு சென்றால்தான் உணவு கிடைக்கும் என்ற அடித்தட்டிலே வாழுகின்ற அந்த குடும்பத்தில் பிறந்த மாணவ – மாணவிகள் இன்றைக்கு அற்புதமான பல் மருத்துவ கல்வி கிடைக்கின்ற வாய்ப்பை உருவாக்கி தந்த அரசாங்கம் அண்ணா திமுக அரசாங்கம் என்பதை மக்களிடத்திலே சொல்ல வேண்டும். நம்முடைய சேலம் மாவட்டத்தில் மட்டும் இந்த ஆண்டு சுமார் 85 பேர் பல் மருத்துவராக ஆகி இருக்கிறார்கள் என தெரிவித்தார்.