செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், நீங்க என்ன யோசிக்கனும்னா… ஏன் நீ அவனுக்கு ( நடிகர் விஜய் )  நெருக்கடி கொடுக்குற ? இது நோக்கம் இருக்காது என சொல்ல முடியாது. இது நோக்கம் என்ன ? இது என்ன நோக்கம்? இதுக்கு  முன்னாடி பாட்டு வெளியிட்டுக்கு கேக்கும் போது ஏன் கொடுத்தீங்க ? நீங்க ஐயா ரஜினிகாந்த் படம் ஜெயிலர் பாட்டு  வெளியிட்டு விழால உரிய பாதுகாப்பு கொடுக்க முடிஞ்சிதுல…

அப்போ ஏன் தம்பி விஜய்க்கு உங்களால கொடுக்க முடியல? நிகழ்ச்சியை ஏன் ரத்து பண்ணுறீங்க? ஏன் நெருக்கடி கொடுக்கிறீங்க? உரிய பாதுகாப்பு கொடுக்குறதுக்கு தான் காவல் துறை இருக்கு. நீங்க நடத்துங்க அப்படின்னு….  நீங்க நடத்தவே கூடாது…. எங்களால பாதுகாப்பு கொடுக்க முடியலைன்னா…  பகிரங்கமா அறிவிப்பு கொடுங்க… மன்னிப்பு கேளுங்க….

சாரி எங்களால முடியலைங்க…. மன்னிச்சிக்கிங்க….  எங்களால பாதுகாப்பு கொடுக்க முடியலைன்னு இந்த கையலாகாததனம்   இருக்குல்ல… இந்த இயலாமை இருக்குல்ல…. அத ஒத்துக்கோங்க…. ஒத்துக்கோங்க அப்போம்… நாங்கல்லாம் காவல் துறைகிட்ட பாதுகாப்பே கேக்குறது இல்ல. நிம்மதி தான் கேட்கறோம்… ஏன்னா நாங்க  தான் நாட்டுக்கே பாதுகாப்பு… எங்களை எதுக்கு இவங்க வந்து பாதுகாக்க போறாங்க… காவல் துறைக்கே நாங்கதான் பாதுகாப்பு. இது எல்லாம் கொடுமை இல்லையா ? இந்த செயல் ரொம்ப அருவருக்கதக்கது. நான் இதை வன்மையா கண்டிக்கிறேன் என தெரிவித்தார்.